கொரோனா பெருந்தொற்றல் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு உதவ தயார்... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

 
கொரோனா பெருந்தொற்றல் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு உதவ தயார்... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்வால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web