கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கும் நியூசிலாந்து பிரதமர்!!

 
New-Zealand

நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் ஜெசிந்தா ஆர்டென். அவருக்கு வயது 40. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (வயது 44) என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கோடை காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வது என திட்டமிட்டு உள்ளனர்.  எனினும், திருமண தேதியை அவர் வெளியிடவில்லை.

இதுகுறித்து ஆர்டென் கூறும்பொழுது, திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டது.  இந்த அறிவிப்பினால் நாங்கள் அனைவரிடமும் திருமண தகவலை கூறிவிட்டோம் என்று அர்த்தமல்ல.  அதனால், முறைப்படி அழைப்பு விட வேண்டும்.  எனினும், திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் மிக இளம்வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017-ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பேற்று கொண்டார்.  இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அக்டோபரில் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்.

From around the web