ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட உரிமையாளர்... வாகனம் பின்னே ஓடி, மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்த செல்லப்பிராணி!!

 
Turkey

துருக்கியில் உரிமையாளர் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்படுவதை அறிந்த நாய், அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் வசித்த பெண் ஒருவர் கோல்டன் ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனையறிந்த நாய், உரிமையாளர் மீதான அன்பால் ஆம்புலன்ஸ் பின்னே பல கிலோ மீட்டர் ஓடியது. மருத்துவமனை வரை ஓடிய அந்த நாய், உரிமையாளருக்காக மருத்துவமனை வாசலிலியே காத்துக்கிடந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்கிறது.

From around the web