கொரோனா தொற்று சிகிச்சைக்கு வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து 2021-ம் ஆண்டின் இறுதியில் தயராகிவிடும் - பைசர் சிஇஓ தகவல்

 
கொரோனா தொற்று சிகிச்சைக்கு வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து 2021-ம் ஆண்டின் இறுதியில் தயராகிவிடும் - பைசர் சிஇஓ தகவல்

கொரோனா தொற்று சிகிச்சைக்கு வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து 2021-ம் ஆண்டின் இறுதியில் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் ருத்ரா தாண்டவம் அடங்கியபாடில்லை.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி வரும்நிலையில், பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து 2021-ம் ஆண்டின் இறுதியில் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

இப்போது செயல்படும் வேகத்திலேயே எல்லாம் நல்ல படியாக நடந்தால், அமெரிக்க மருந்து கட்டுப்பாடு அமைப்பும் விரைவில் ஒப்புதல் அளித்தால், இது சாத்தியமாகும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனமான பைசர் கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்காக வாய் வழி மற்றும் ஊசி மூலம் செலுத்தும் மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

From around the web