அமெரிக்காவில் 5 ஆயிரம் பெணகளுடன் தொடர்பில் இருந்த கோடீஸ்வரர்..! சிக்கியது எப்படி?

 
Michael-Goguen

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 5 ஆயிரம் பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் நகரில் பிரபல நிறுவனத்தை நடத்தி வருபவர் மைக்கேல் கோகன். இவருக்கு சொந்தமாக பல நிறுவனங்கள் உள்ளதால் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரராக விளங்கி வருகிறார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் செக்வோயா கேப்பிட்டல் எனும் நிறுவனத்தில் பணிப்புரிய துவங்கி அதே நிறுவனத்தின் பங்குதாரராகும் அளவிற்கு வளர்ச்சி பெற்றார். ஆனால் அங்கு பணிபுரிந்த பெண்கள் மைக்கேல் கோகன் மீது பாலியல் புகார் அளித்ததால் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு தானாகவே சொந்த நிறுவனத்தை தொடங்கி தற்போது பெரும் தொழிலதிபராக அசுர வளர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவரது நிறுவனத்தில் பணிப்புரியும் 4 பெண்கள் இவர் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்த பெண்களுள் ஒருவர் மைக்கேல் கோகன் இதுவரை 5 ஆயிரம் பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் எக்ஸெல் ஷீட்டில் அவர் தொடர்பில் இருந்த 5 ஆயிரம் பெண்களின் விவரங்கள் அனைத்தையும் ஆதாரமாக சேகரித்து வைத்துள்ளார்.

மைக்கேல் கோகன் தன்னுடன் தொடர்பு கொண்ட பெண்களின் விவரங்களை பாதுகாப்பான அறையில் வைத்திருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர் மீது 135 பக்கம்கொண்ட குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வழக்குத் தொடர்பான அவரிடம் இருந்து 800 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகை கேட்டுக்கப்பட்டு இருக்கிறது.

From around the web