தாரில் சிக்கி உயிருக்குப் போராடிய குட்டி நாய்... காப்பாற்ற மனிதர்களை உதவிக்கு அழைத்த தாய் நாய்..!

 
Russia

ரஷ்யாவில் தாரில் சிக்கி உயிருக்குப் போராடிய குட்டியைக் காப்பாற்ற மனிதர்களை நாய் ஒன்று உதவிக்கு அழைத்தது.

ரஷ்யாவின் நம்ட்ஸி என்ற இடத்தில் நண்பர்கள் இருவர் நடந்து சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த நாய் ஒன்று கெஞ்சும் குரலில் அவர்களை உதவிக்கு அழைத்தது.

நாயின் பின்னால் சென்ற அந்த நண்பர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒதுக்குப்புறமான இடத்தில் உடல் முழுவதும் தாருடன், தனது குட்டி உயிருக்குப் போராடுவதை அந்த நாய் காட்டியது.

இதனைக் கண்ட நண்பர்கள் குட்டியை மீட்டு அதன் மீது ஒட்டியிருந்த தார் முழுவதையும் அகற்றி விட்டு அருகில் இருந்த குளத்தில் குட்டியைக் குளிக்க வைத்த பின் தாய் நாயிடம் சேர்ப்பித்தனர்.


 

From around the web