தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் கொடுமை! எந்த நாட்டில் தெரியுமா?

 
Japan-kids

ஜப்பானில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்கொலை செய்துக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன மற்றும் பிள்ளைகளை வகுப்பறைகளையே மறக்கும் நிலைக்கு சென்றனர்.

இதனால் தொடக்கநிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்கொலை எண்ணிக்கை கிட்டத்தட்ட 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது 1974-ல் குழந்தை தற்கொலைகளை பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து அதிகமாகும் என்று ஜப்பானின் பெரிய செய்தித்தாளான தி அசஹி ஷிம்புன் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் வீட்டுச் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளின் நடத்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன என்று ஒரு கல்வி அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தின் ஒரு முயற்சியில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 40 சதவீத எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கொரோனாவுக்கு மத்தியில், 2020-ல் பெருந்தொற்றால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் நிதி அழுத்தங்களுக்கு மத்தியில் தற்கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது, இருப்பினும் ஆண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது குறைவது என தெரியவந்துள்ளது.

அவமானம் அல்லது அவமதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக ஜப்பானில் தற்கொலை ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, மேலும் ஜி7 நாடுகளின் குழுவில் அதன் தற்கொலை விகிதம் நீண்ட காலமாக மிக அதிகமாக உள்ளது.

From around the web