பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்!! என்ன காரணம்?

 
Magdalena-Andersson

சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சுவீடனில் பாராளுமன்ற வாக்கெடுப்பின்படி, அந்நாட்டின் சமூக ஜனநாயக கட்சியின் தலைவரான மாக்டலேனா ஆண்டர்சன் பசுமைக் கட்சி கூட்டணியுடன் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதன்கிழமை சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதிவியேற்றுக்கொண்டார் மக்டலினா ஆண்டர்சன். ஆனால், எதிர்பாராத விதமாக பதவியேற்ற 12 மணி நேரங்களிலேயே அவர் பதவி விலகினார்.

கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பசுமைக் கட்சி அறிவித்ததை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆண்டர்சன் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை, இது மரியாதைக்கு உரியது, ஆனால் நான் அரசாங்கத்தை வழிநடத்த விரும்பவில்லை, அங்கு அதன் சட்டபூர்வமான தன்மையைக் கேள்விக்குட்படுத்தலாம்.
 
ஒரு கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற விரும்பினால் ஒரு கூட்டணி அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும். பாராளுமன்ற நிலைமை மாறாமல் இருந்தாலும், அது மீண்டும் முயற்சிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

மாக்டலேனா ஆண்டர்சன் முன்பு நிதியமைச்சராகப் பணியாற்றியதோடு, இந்த மாத தொடக்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

From around the web