கனடாவில் சக மாணவனை கத்தியால் குத்தி சாய்த்த சிறுவன்..! பின்னணி என்ன?

 
Toronto

கனடாவில் சக மாணவனை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் டொராண்டோவில் உள்ள ஜார்ஜ் எஸ். ஹென்றி அகாடமியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து டொராண்டோ போலீஸ் அளித்த தகவலில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜார்ஜ் எஸ். ஹென்றி அகாடமியில் 16 வயது சிறுவன் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை 15 வயதுடைய மற்றொரு சிறுவன் அணுகியுள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. பின் 15 வயதுடைய சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் 16 வயதுடையவர் உடலில் குத்தியுள்ளார்.

காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மீது மோசமான தாக்குதல், ஆயுதத்தால் தாக்கியது, ஆபத்தான ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர்.

கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட சிறுவர்களை அடையாளம் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web