வாளிக்குள் தலை விட்டு சிக்கிய கரடி..! வாளியை வெட்டி கரடியை மீட்ட சமூக ஆர்வலர்!!

 
Bear

அமெரிக்காவில் பிளாஸ்டிக் வாளிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு அவதிப்பட்ட கரடி பத்திரமாக மீட்கப்பட்டது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பவுல்டர் என்ற இடத்தில் கரடி ஒன்று பிளாஸ்டிக் வாளிக்குள் இருந்த பொருளைச் சாப்பிடுவதற்காக தலையை உள்ளே நுழைத்த போது சிக்கிக் கொண்டது.

ஒரு வாரம் தவியாய் தவித்து வந்த கரடியைக் கண்ட இரு நண்பர்கள் அதற்கு மயக்க மருந்து கொடுத்தனர். ஆனாலும் மரத்தின் மீதேறி அடம் பிடித்த கரடி பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் மயங்கிய கரடியின் கழுத்தில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் வாளி துண்டிக்கப்பட்டு கரடி வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.

From around the web