குவானாஜா தீவில் பயங்கர தீ விபத்து... வெளியான வீடியோ காட்சி

 
Guanaja

ஹோண்டுராஸில் உள்ள ஒரு சிறிய தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றபட்டனர்.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 43 மைல் தொலைவில் கரீபியன் தீவான குவானாஜா அமைந்துள்ளது.

குவானாஜா தீவில் நேற்று காலை திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தினால் நெருப்பு மற்ற வீடுகளுக்கும் பரவியது. இந்த தீவிபத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எரிந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Guanaja

இதனைத் தொடர்ந்து நெருப்புப் பற்றிய வீடுகளில் இருந்த 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து ஹோண்டுராஸ் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் நெருப்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அணைத்தனர்.

தீவிபத்து தெடர்பாக இடர் மேலாண்மை அமைச்சர் மேக்ஸ் கோன்சலேஸ் கூறுகையில், “எந்த உயிரிழப்பும் இல்லை, ஆனால் மிகப்பெரிய பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

மேலும், தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர், இதில் 90 வீடுகள் முற்றிலும் எரிந்துள்ளது என்றும் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகி உள்ளது என்றும் கோன்சலேஸ் கூறினார். 

From around the web