அமெரிக்கா துணை அதிபர் பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம்!!

 
Kamala-Harris

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று அரசு முறை பயணமாக கவுத்தமாலா மற்றும் மெக்சிகோ நாட்டிற்கு செல்ல புறப்பட்டார். தனி விமானம் மூலம் கமலா ஹாரிஸ் இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். வாஷிங்டன்னில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து தனது அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் கமலா ஹாரிஸ் புறப்பட்டார்.

புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் உடனடியாக அவசர அவசரமாக மீண்டும் வாஷிங்டன் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் மாற்றும் விமானம் மூலம் கவுத்தமாலா புறப்பட்டு சென்றார். துணை அதிபர் பயணித்த விமானத்தில் சிறு தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தான் பயணித்த விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அவரச அவரசமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக கமலா ஹாரிஸ் கூறுகையில், நான் நலமுடன் உள்ளேன். நாங்கள் சிறு பிரார்த்தனை செய்தோம். ஆனால், நாங்கள் நலமுடன் உள்ளோம்.

From around the web