சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் - சுந்தர் பிச்சை

 
Sundar-Pichai

சில நாடுகளில் சமூக வலைதளங்களில் சுதந்திரம் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கவலை தெரிவித்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுந்தர் பிச்சை, சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார். எனினும், பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா தன் மனதில் வேரூன்றி இருக்கிறது எனவும், கொரோனாவால் இந்தியாவில் பல ஆயிரம் பேர் இறந்த செய்தியைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக உருக்கம் தெரிவித்திருந்தார். நான் என்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது எனவும் கூறினார்.

From around the web