அமெரிக்கா பூங்காவில் துப்பாக்கிச் சூடு; 6 சிறுவர்கள் படுகாயம்

 
Denver

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்துக்கு அருகே உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அரோரா நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் சிறுவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளிக்கூடத்திற்கு அருகே ஒரு விளையாட்டு பூங்கா உள்ளது.

இந்நிலையில் பூங்காவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? என்கிற தகவல்கள் தெரியவரவில்லை. மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web