இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையால் மனம் உடைந்து போனேன் - சத்ய நாதெள்ளா வருத்தம்

 
இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையால் மனம் உடைந்து போனேன் - சத்ய நாதெள்ளா வருத்தம்

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டு மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா 2-வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டு மனம் உடைந்து போய் உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளேன். இந்தியாவுக்கு அமெரிக்க அரசு உதவுவதற்கு நான் நன்றி செலுத்துகிறேன். மைக்ரோசாப்ட் தொடர்ந்து அதன் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு பயன்படுத்தும். மேலும், ஆக்சிஜன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் மைக்ரோசாப்ட் உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

From around the web