அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு..! இண்டியனாபொலிஸ் நகரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

 
USA

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில்  துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் துப்பாக்கிகளின் பயன்பாடும், துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவின் இண்டியனா மாகாணத்தின் தலைநகரான இண்டியனாபொலிஸ் நகரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web