விண்வெளிக்கு சென்று வந்த ரிச்சர்டு பிரான்சன் நம்ம கடலூர்காரர்...  இந்திய ரத்தம் ஓடுவதாக கூறி அவரே பெருமிதம்!!

 
Richard-Barnson

விண்வெளிக்கு சென்று வந்த முதல் பில்லியனர் என்ற வரலாற்றைப் படைத்துள்ள ரிச்சர்டு பிரான்சனின் முன்னோர்கள் 4 தலைமுறைக்கு முன் கடலூரில் வாழ்ந்தவர்கள் என்றும், அவரது எள்ளுத்தாத்தாவின் மனைவி இந்தியாவை சேர்ந்தவர் என்றும் அவரே கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு, விர்ஜின் அட்லாண்டிக் விமானசேவை தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிச்சர்டு பிரான்சன், இந்திய ரத்தமும் தனது உடலில் ஓடுவது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறினார்.

இந்தியர்களை பார்க்கும்போது தமது உறவினர்களைப் போலவே பார்ப்பதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியிருந்தார். தமது எள்ளுத்தாத்தாவின் மனைவி இந்தியர் என்றும், அவரது பெயர் ஆர்யா என்றும் பிரான்சன் தெரிவித்திருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பிறகு, 1793-ம் ஆண்டு முதல் 4 தலைமுறைகளாக தனது முன்னோர் தமிழ்நாட்டின் கடலூரில் வசித்தவர்கள் எனவும் பிரான்சன் கூறியுள்ளார்.

From around the web