இங்கிலாந்தில் கறுப்பின இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கும் காவலர்!!

 
England

இங்கிலாந்தில் கறுப்பின இளைஞரை போலீசார் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் வேல்ஸ் மாநிலத்திலுள்ள நியூபோர்ட் நகரில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை, போலீசார் ஒருவர் தடியால் தாக்குகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கறுப்பின இளைஞரை தாக்கிய காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

From around the web