மிச்சிகனில் உள்ள பீவர் தீவில் விமான விபத்து: 4 பேர் பலி

 
Michigan

மிச்சிகனில் உள்ள பீவர் தீவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மேக்கினாவ் நகருக்கு மேற்கே உள்ள பீவர் தீவில் உள்ள விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று  எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 4 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் பயணித்தவர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தின் கடலோர காவல்படையினர் இதனை தெரிவித்தனர்.

இந்த விமான விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web