துருக்கியில் பிங்க சூப்பர் மூன் அற்புதமாய் உதயம்..! வைரல் வீடியோ!!

 
துருக்கியில் பிங்க சூப்பர் மூன் அற்புதமாய் உதயம்..! வைரல் வீடியோ!!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இந்த ஆண்டின் சூப்பர் மூன் தென்பட்டது.

பொதுவாக பூமியை நிலவானது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நீண்ட தொலைவுக்கு செல்லும் பாதை அபிஜீ என்றும், குறைந்த தொலைவில் வரும்போது பெரிஜீ என்றும் அதன் தொலைவானது அழைக்கப்படுகிறது.

பூமியில் இருந்து குறைந்த பட்சமாக பெரிஜீ சுற்றுப்பாதையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக அபிஜீ பாதையில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலவானது சுற்றிக் கொண்டுள்ளது.

சாம்லிக்கா மசூதி மற்றும் கலாட்டா டவர் இடையே இந்த சூப்பர் மூன் தோன்றியது. சந்திரன் பூமிக்கு அருகில் வரும் போது வழக்கமாக காணப்படும் நிலா தன்னுடைய அளவில் சற்று பெரியதாக காணப்படும்.

இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான சூப்பர் மூனை பிங்க் சூப்பர் மூன் என்று நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வானில் அற்புதமாய் தோன்றிய இந்த சூப்பர்மூனை துருக்கி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

From around the web