கென்யாவில் தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர் லாரி... கேன்களில் பிடிக்க வந்த 13 பேர் உடல்கருகி உயிரிழப்பு!!

 
Kenya

கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மற்றொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியின் வடமேற்குப் பகுதியில் உகாண்டா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸூமு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் எரிபொருளை பிடிப்பதற்காக கேன்களுடன் சென்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த லாரியில் தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவியதால் மக்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் குழந்தைகள் உள்பட 24 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web