தப்பி வந்த கன்றுக்குட்டியை தாயிடம் சேர்த்த பாசமிகு பெண் சிங்கம்..! நெகிழவைக்கும் வீடியோ!!

 
Wilderbeast-walking-along-the-Lioness-at-Serengeti-National-Park-in-Tanzania

கால்நடைகளை சிங்கம் போன்ற விலங்குகள் வேட்டையாடி உண்பது சாதாரணமான ஒரு விஷயம்தான். அது இயற்கையும் கூட...

ஆனால், தன் மந்தையிலிருந்து தப்பி வந்த ஒரு கன்றுக்குட்டியை ஒரு சிங்கம் தப்பவிடுமா என்பது சந்தேகத்துக்குரிய ஒரு விஷயம்தான். அதாவது, தேடி வந்த இரையை ஒரு சிங்கம் உண்ணாமல் அதன் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது சாத்தியமா?

ஆனால், அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது... தனது தாயிடமிருந்து பிரிந்து வந்த ஒரு கன்றுக்குட்டியை உண்ணாமல், அதன் மந்தைக்கே கொண்டு சேர்த்து, நானும் தாய்தான் என நிரூபித்துள்ளது ஒரு பெண் சிங்கம்!

தான்சானியாவிலுள்ள செரெங்கேட்டி தேசியப் பூங்காவில் இந்த அபூர்வக் காட்சியை பூங்கா அலுவலர்கள் படம்பிடித்துள்ளார்கள்.


அந்த வீடியோவில், இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்களே, அதுபோல, தான் தன்னைக் கொன்று தின்னக்கூடிய ஒரு விலங்கின் அருகில் இருக்கிறேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள இயலாத ஒரு இளம் கன்றுக்குட்டி, ஒரு பெண் சிங்கத்துடன் நடப்பதைக் காண முடிகிறது.

அந்த சிங்கம், அந்த கன்றுக்குட்டியை கூடவே அழைத்துச் சென்று அதன் மந்தையிடம் அனுப்பிவிட்டுத் திரும்பியதாக கூறும் வனத்துறை அதிகாரிகள், இது ஒரு அதிசய நிகழ்வு என்கிறார்கள்.

From around the web