பாகிஸ்தான் பிரபல நடிகை திடீர் மரணம்!!

 
Naila-Jaffery

மூத்த நடிகை நைலா ஜாஃபெரி உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 50.

பாகிஸ்தானில் 90-களின் பிற்பகுதியிலிருந்து ஜாஃபெரி தொலைக்காட்சியில் நடித்து வந்தார். ஆ முஜ் கோ சதானா, தேசி கேர்ள்ஸ் மற்றும் தோடி சி குஷியன் போன்ற நாடக சீரியல்களில் தனது நட்சத்திர நடிப்பால் புகழ் பெற்றார். அவர் கடைசியாக 2016-ம் ஆண்டு நடித்தார். அதன்பின்னர் அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது.

அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வீடியோ செய்தியைப் பதிவை வெளியிட்டார். அதில், சேனல் உரிமையாளர்கள் உள்பட அனைத்து நடிகர்களுக்கும், தனது முந்தைய படைப்புகளின் மறுபதிப்புக்கு ராயல்டி வழங்க வேண்டும். அது தனக்கான சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், அமைச்சர் சர்தார் அலி ஷா, ஜாஃபெரி சிகிச்சைக்கான செலவுகளை மாகாண அரசு ஏற்கும் என்று அறிவித்தார். இந்நிலையில் புற்றுநோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்தனர்.
 
நடிகை நைலா ஜாஃபெரி இறுதி சடங்கு நேற்று டிஹெச்ஏ கட்டம் 2-ல் உள்ள டூபா மசூதியில் நடைபெற்றது மற்றும் கலாபுல் அருகே உள்ள ராணுவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

From around the web