ஈராக்கில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து 82 பேர் உயிரிழப்பு!

 
ஈராக்கில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து 82 பேர் உயிரிழப்பு!

ஈராக் தலைநகர் பாக்தாதில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காடிப் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து நேரிட்டது.

தொடர்ந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளிலும் மளமளவென்று தீ பரவியதால், அங்கிருந்த நோயாளிகள் வெளியேற முடியமால் பலியானார்கள்.

இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விபத்து தொடர்பாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதீமி விரிவான விசாரணை நடத்தி தக்க தண்டனை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


 

From around the web