ஏவுகணைச் சோதனை செய்த வடகொரியா: அமெரிக்கா எச்சரிக்கை

 
North-Korea

வடகொரியா தொலை தூரம் சென்று இலக்குகளைத் தகர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

வட கொரியா, கொரிய தீபகற்பத்தின் குட்டி நாடு. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது வடகொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4-வது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. வட கொரியா ஒரு அணு ஆயுத நாடாக அறியப்படுகிறது. அதன் அணு ஆயுதக் கட்டமைப்புகள் குறித்து எப்போதுமே அமெரிக்கா கவலை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

North-Korea

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தற்போது வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கி அதிர வைத்துள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக இந்த ஏவுகணை உள்ளது. 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா சோதனை செய்த இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து  கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவம்,  வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.

From around the web