நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து மர்ம நபர் தாக்குதல்... போலீசார் துப்பாக்கி சூட்டில் பலி!

 
NewZealand

நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர், மர்ம மனிதர் போலீசாரால் சுட்டுக்கொல்லபட்டார்.

நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு  மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில்  நியூலின் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெடுக்குள் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை சரமாறியாக கத்தியால் தாக்கினார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மர்ம நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மர்ம நபர் சம்பவ இடத்திலே பலியனார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

தாக்குதல் நடத்தியவர் இலங்கையைச் சேர்ந்த நபர் ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web