வரும் 4-ம் தேதி முதல் அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

 
வரும் 4-ம் தேதி முதல் அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை காரணமாக தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, இந்தியாவில் அசாதாரணமாக உயர்ந்து வரும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா வரும் அனைத்து பயணிகளும் கொரோனா நெகட்டிவ் சான்று அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

From around the web