ஐ.நா.பொதுச்சபையின் 76-வது தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு

 
Abdulla-Shahid

ஐ.நா.பொதுச்சபையின் தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வுஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76-வது தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22 ஆண்டுக்கான வாய்ப்பு ஆசிய-பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்கியது.

அதே சமயம் மாலத்தீவு இந்த பதவியை இதுவரை வகித்தது இல்லை. இதனால் பல்வேறு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடந்த நவம்பரில் அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது .

இதற்கிடையே, திடீரென ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சலமாய் ராசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால் முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த தேர்தலில் அப்துல்லா ஷாகித்துக்கு 143 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஐநா சபையின் 76வது தலைவராக அப்துல்லா ஷாகித் பொறுப்பேற்கிறார். வெற்றி பெற்ற அவருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

From around the web