கொரோனாவை குணப்படுத்த மருந்து வருகிறதா?

 
Merck

உலகமெங்கும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவை தடுப்பதற்காக துரித வேகத்தில் செயல்பட்ட மருந்தக தொழிற்சாலைகள், தற்போது கொரோனா வந்தபின் வரும் உயிரிழப்பக்களை தவிர்க்க மருந்துக்களை கண்டு பிடிக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளது.

காரணம் ஓரு உயிரும் கொரோனாவிற்கு பலியாக கூடாது என்ற எண்ணமும், தேவையான அளவு மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத காரணத்தாலும் தான். அந்த வகையில் முதலில் மருந்து கண்டுபிடித்தது கிளியாட். ரெம்டெசிவிர் என்னும் ஆண்டிவைரல் மருந்தை 2020ல் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள  நோயாளிகளுக்கு மட்டுமே உபயோகமாக இருந்தது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு இதன் பயன்பாடு குறைவடைய துவங்கின.

குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியானது 12 வயது முதல் போடப்படுகிறது. தற்போது 5 முதல் 11 வயது வரையில் உள்ள குழந்தைகளின் பயன்பாட்டிற்கும் விண்ணப்பித்துள்ளது. பள்ளிகள் துவங்கியதால் இது மிகவும் நல்ல செய்தியாக கருதப்படுகிறது. இருப்பினும் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன மருந்துகளை மற்ற நாடுகளில் பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன.

இந்நிலையில் தற்போது பல மருந்தக தொழிற்சாலைகள் கோவிட் வந்த பிறகு குணப்படுத்தும் மருந்துகள் தயாரிப்பதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன. அதில் முந்தியது மெர்க். மோல்நூப்ரீவர் என்னும் வைரஸ் எதிர்ப்பு மருந்தினில் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிந்த நிலையில் அதை அவசரகால உபயோகத்திற்கான அனுமதியை பெற உணவு மற்றும் மருந்து நிறுவனத்திற்கு (FDA) அனுப்பியுள்ளது.

இதைத் தொடந்து இந்த மருந்து சீக்கிரமாக பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இருந்தாலும் இதன் விலை மிக அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது. அது போல் இந்த மருந்து சில பக்கவிளைவுகள் உள்ளதாகவும் தெரிகிறது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது போல் தடுப்பூசியில் முந்திய பைசர் நிறுவனமும் பிஎப்-07321332 என்ற மருந்தினில் 3ம் கட்ட பரிசோதனையில் நல்ல தேர்ச்சி விகிதம் வந்திருப்பதாக கூறியுள்ளது.

பைசர் மருந்தானது இரண்டு தனிதனி விகிதமாக இருவேறு மருந்துகளை உள்ளடக்கியது. இந்த மருந்து முதன்மை புரத என்சைமினை தடுத்து அதன் மூலம் வைரஸ் பல்கி பெறுகுவதை தடுக்கிறது. மேலும் குறைந்த அளவு ரோட்டனவிர் எனப்படும் மருந்தையும் உள்ளடக்கி இருப்பதால் அது முதன்மை மருந்தினை நீண்ட நேரம் உயிர்ப்புடன் இருக்க செய்கிறது. மெர்க் மருந்தினை காட்டிலும் இதன் பக்கவிளைவு கம்மி என தான் தெரிகிறது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படியோ கொரோனாவை ஒழித்து உலக நாடுகள் பழைய நிலைக்கு திரும்பட்டும்.

– பிரேம் ஆனந்த், மருத்துவ ஆராய்ச்சியாளர், கான்சஸ், யு.எஸ்.ஏ.

From around the web