துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர்..! தாலிபான்கள் செயலா? வெளியான அதிர்ச்சி தகவல்

 
Afghan

ஆப்கனில் துப்பாக்கி முனையில் இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் வசம் சென்றது. இதனால் மக்கள் உயிர்வாழ பயந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பன்சிரிலால் அரெண்டே (வயது 50) என்பவர் தனது குடும்பத்தை டெல்லியில் விட்டுவிட்டு இவர் மட்டும் தனியாக ஆப்கானிஸ்தானில் மருந்து கடையை நடத்தி வருகிறார்.

இதையடுத்து நேற்று இரவு 8 மணியளவில் இவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது துப்பாக்கியுடன் வந்தவர்கள் பன்சிரிலால் மற்றும் அவரது கடையின் ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்களை அவர்கள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக ஆப்கனில் உள்ள சீக்கிய இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சீக்கிய இந்து அமைப்பினர் கேட்டு கொண்டுள்ளனர். அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web