கனடாவில் குப்பைகளின் நடுவே கிடந்த மனித உடல் பாகங்கள்... போலீஸ் குவிப்பு

 
Canada

கனடாவில் மறுசுழற்சிக்காக குவிக்கப்பட்டிருந்த குப்பைகளின் நடுவே மனித உடல் பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டாவா மாகாணம் ஷெஃபீல்ட் சாலை என்ற பகுதியில் அமைந்துள்ள மறுசுழற்சி மையம் ஒன்றில் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு நடுவே மனித கால் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு பின்னர் கொலை வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு எவ்வகையிலும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போதைக்கு விசாரணை குறித்த எந்த தகவலையும் வெளியிடப்போவதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

From around the web