நடுவானில் ஹெலிகாப்டரும் விமானமும் மோதி பயங்கர விபத்து...! வெளியான பரபரப்பு வீடியோ

 
Chandler-helicopter-crashed

அமெரிக்காவில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து சாண்ட்லர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட் ஜேசன் மெக்லிமன்ஸ் கூறியதாவது, நடுவானில் நடந்த இந்த பயங்கர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டரும் விமானமும் மோதியிதில் விமானம் சாண்ட்லர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர்.


விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொள்கிறது என்று மெக்லிமன்ஸ் கூறினார்.

From around the web