அவர் ஆண்மையற்றவர்... மனைவியின் பேச்சால் கோபமடைந்த கணவன் எடுத்த முடிவு

 
Kanwal-Niana

ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர், தமது மனைவியை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த கன்வால் என்பவர், தமது மனைவியை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். தாம் ஒரு ஆண்மையற்றவர் எனவும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறி, தமது மனைவி இந்தியாவில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக கன்வால் தெரிவித்துள்ளார்.

ஆனால் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிய கன்வால், இந்தியாவில் இருந்து சிட்னிக்கு திரும்பியுள்ளார். சிட்னியில் மருத்துவர் ஒருவரை அணுகி, தமக்கு உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என சான்றிதழ் வாங்கியுள்ளார்.

ஆனால் கன்வாலின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், திருமணத்திற்காக செலவிட்ட மொத்த தொகையும் கன்வால் குடும்பம் திருப்பித்தர வேண்டும் என வாதிட்டு வருகிறது.

Kanwal-Niana

கன்வாலின் மனைவி நைனா ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற பின்னரே, குடும்பத்தில் பிரச்சனை உருவானதாக கூறப்படுகிறது.

இருவரும் இந்தியாவுக்கு ஒருமுறை சென்ற நிலையில், நைனாவின் உறவினர் ஒருவர் தொலைபேசியில் கன்வாலை தொடர்பு கொண்டு ஆண்மையற்றவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், தங்களில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என கூறுவது உண்மை இல்லை எனவும் கன்வால் தெரிவித்துள்ளார்.

Kanwal

இருப்பினும் நைனா அளித்த புகாரின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து போலீசார் விளக்கம் கேட்டு மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.

தற்போது நைனாவும் இந்தியாவில் இருந்து திரும்பி மெல்போர்ன் நகரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற, நைனா குடும்பம் திட்டமிட்டு நடத்திய நாடகமா என்பதில் தமக்கு சந்தேகம் இருப்பதாக கன்வால் தெரிவித்துள்ளார்.

From around the web