நியூ யார்க் நகரில் ஹாரி பாட்டர் கடை; ஆச்சரியத்தில் மக்கள்!

 
New-York

அமெரிக்காவில் ஹாரி பாட்டர் படத்தில் வரக்கூடிய அனைத்து பொருட்களும் அடங்கிய கடை திறக்கப்படவுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய படம் ஹாரி பாட்டர். இப்படத்தில் வரும் மேகிக் கதாப்பாத்திரங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஹாரி பாட்டர் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மிகவும் உயிரோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாலும் அதில் உள்ள மாயாஜால பள்ளிகளாலும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் 21 சதுர அடி பரப்பளவில் சுமார் மூன்று தளங்கள் கொண்ட ஹாரி பாட்டர் கடை, வரும் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படவுள்ளது.

அந்த கடையில் ஹாரி பாட்டர் படத்தில் இடம்பெறும் ஃபீனிக்ஸ் பறவையின் மாதிரி, மாயாஜாலப் பள்ளியின் சீருடைகள், ராட்சத பாம்பு மாதிரி, அந்தரத்தில் பறக்கும் ஹாரிபாட்டர் புத்தகங்கள், டெலிஃபோன் பூத், மந்திரக் கோல்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

From around the web