அமெரிக்காவில் ‘எச் 4’ விசாதாரர்களுக்கு நற்செய்தி...  தானாகவே பணி அனுமதி..!

 
USA-Visa

பணி அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்றும் வகையில் குடியேற்ற கொள்கையை திருத்தி அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது.இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.

அதேபோல் ‘எச்1 பி’ விசாதாரர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்குட்பட்ட அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ‘எச் 4’ விசா வழங்கப்படுகிறது.

‘எச் 4’ விசாதாரர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் பணி அனுமதி காலாவதியானதும், அதனை நீட்டிப்பதற்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் பணி அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்றும் வகையில் குடியேற்ற கொள்கையை திருத்த வலியுறுத்தி ‘எச் 4’ விசாதாரர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், ‘எச் 4’ விசாதாரர்களின் பணி அனுமதி காலாவதியானதும், விண்ணப்பம் இன்றி தானாகவே அவர்களுக்கு பணி அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைக்கு உத்தரவிட்டது. அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இதனை ஏற்று ‘எச் 4’ விசாதாரர்களுக்கு தானாக பணி அனுமதி கிடைக்க அனுமதி வழங்கியுள்ளது.

‘எச் 4’ விண்ணப்பதாரர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்திய பெண்கள் என புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன. எனவே இந்த புதிய உத்தரவின் மூலம் இந்திய பெண்கள் அதிகளவில் பெயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web