அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்!

 
Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவியதையடுத்து,கடந்த ஜனவரி மாதம் தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட கலவரத்திற்கு அவரது கருத்துக்களே காரணம் என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் டிரம்பின் கணக்குகளை முடக்கின .

வன்முறை சம்பவத்தை தொடர்ந்து டிரம்பின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது . ஆனால் , ஃபேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக தடைவிதித்தது. இந்நிலையில், டிரம்பின் ஃபேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் விதித்த தடை குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், தனக்கு வாக்களித்தவர்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதை எனக் கூறியுள்ளார்.

From around the web