தைவானில் 13 மாடி கட்டடத்தில் தீ விபத்து; 46 பேர் பலி

 
Taiwan

தைவான் நாட்டில் 13 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தைவான் நாட்டின் தெற்கே காவோசியங் நகரில் 13 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது.  இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த தீயானது அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால், கரும்புகை பரவி வான் வரை சென்றது.  இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  எனினும், புகை மூட்டம் மற்றும் தீ பரவல் கடுமையாக இருந்தது தீயணைப்பு பணிக்கு இடையூறாக இருந்தது.

முதற்கட்ட தகவலின்படி, 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  இதுதவிர, மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 55 பேரில் 14 பேர் உயிரிழந்தனர்.  இன்று மாலைக்குள் கட்டிடம் முழுவதும் தேடி, மீட்பு பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.


 

From around the web