கலிபோர்னியாவில் சொந்தமாக உள்ள கடைசி வீட்டை விற்கும் எலான் மஸ்க்; என்ன காரணம்?

 
Elon-Musk

கலிபோர்னியாவில் தான் வசித்து வரும் மாளிகையை விற்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கலிபோர்னியாவில் 16,000 சதுர அடி நிலபரப்பில் அமைந்துள்ள மாளிகையை விற்க திட்டமிட்டுள்ளார். அந்த மாளிகையின் விலையை 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைத்து 31.99 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 241 கோடி ரூபாய்) விற்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியிலில் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 225 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் மாதம், அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘சொந்தமாக உள்ள கடைசி வீட்டை விற்க முடிவு எடுத்துள்ளேன். பெரிய குடும்பத்திற்குதான் அந்த வீடு செல்ல வேண்டும். அது ஒரு சிறப்பான இடம்’ என பதிவிட்டிருந்தார்.

மஸ்க் நிறைய சொத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், தனது சொத்துகளை விற்கவுள்ளதாக அவர் கடந்தாண்டு அறிவத்திருந்தார். கலிபோர்னியா ஹில்ஸ்பரோவில் 47 ஏக்கரில் உள்ள அவரது வீட்டில், ஏழு படுக்கை அறைகளும் 10 குளியல் அறைகளும் உள்ளன. கடந்த 1916-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டில், நூலகம், இசை அறை, முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட சமையலறை, நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன.

“நிகழ்ச்சிகளுக்காக வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அது விற்கப்படும் பட்சத்தில் பெரிய குடும்பம் அதை வாங்கவில்லை எனில் அந்த வீடு முழுமையாக பயன்படாது. ஒரு நாள் அது நடைபெறும்” என மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை சிலிக்கான் வேலியிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு மாற்றவிருக்கிறோம் என அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழிலாளர்களுக்கான செலவு அதிகமாக உள்ளதாகவும் செலவுகளை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்துவருவதாகவும் மஸ்க் கூறியிருந்தார். இதன் காரணமாகவே, தலைமையகத்தை மாற்றவிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

From around the web