பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீச்சு... மர்ம நபர் கைது..!

 
Emmanuel-Macron

பிரான்சில் கண்காட்சியில் கலந்து கொண்ட அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீது முட்டை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

பிரான்சின் லியோன் நகரில் நடந்த கேட்ரிங் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்ட அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீது மர்ம நபர் முட்டை வீசினார். மேக்ரான் தோள்பட்டையில் விழுந்த முட்டை உடையாமல் கீழே விழுந்தது. சுற்றி இருந்த பாதுகாவலர்கள் மர்ம நபர்களை மடக்கிப் பிடித்தனர்.

எந்த காரணத்திற்காக முட்டை வீசினார் என மர்ம நபரிடம் தான் பேச விரும்புவதாக அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.

முன்னதாக ஜூன் மாதத்தில், தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்த போது ஒரு நபர் இமானுவேல் மேக்ரோனை அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

From around the web