துணை அதிபா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த அதிபர் மகள்

 
RodrigoDuterte-SaraDuterte

அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் மகள் சாரா துதர்தே துணை அதிபர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பிலிப்பைன்சில் அடுத்த ஆண்டு மே மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போதைய அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் மகள் சாரா துதர்தே துணை அதிபர் பதவிக்கு போட்டியிட நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதிபரின் கூட்டணியைச் சேர்ந்த பொனாண்ட் மாா்கோஸ் அதிபா் தேர்தலில் போட்டியிடும் நிலையில், துணை அதிபராக சாரா போட்டியிடுகிறாா்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் அதிபராகப் பொறுப்பு வகித்து வரும் ரோட்ரிகோ துதர்தே, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில் துணை அதிபா் பதவிக்குப் போட்டியிடப் போவதாக துதர்தே அறிவித்தாா். ஆனால் பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவா் ஒரு முறை மட்டுமே 6 ஆண்டுகளுக்கு அதிபா் பதவியை வகிக்க முடியும்.

இந்த நிலையில், அதிபா் பதவிக்கு அவரது கூட்டானியும் துணை அதிபா் பதவிக்கு ரோட்ரிகோ துதர்தேவின் மகளும் போட்டியிடுகின்றனர்.

From around the web