ஏலத்திற்கு வந்த டாவின்சியின் மிகச்சிரிய ஓவியம்!! ஏல விலை எவ்வளவு தெரியுமா..?

 
Da-Vinci-painting

டாவின்சி வரைந்த ‘கரடியின் தலை’ என்ற மிகச்சிறிய ஓவியம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இத்தாலி நாட்டில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த லியனார்டோ டாவின்சி, உலகப் புகழ் பெற்ற ஓவியக்கலைஞர் ஆவார். இவர் வரைந்த ‘மோனலிசா’ ஓவியம் கலையுலகில் இன்று வரை அரிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது. இவரது ஓவியங்கள் ஏலம் விடப்படும் போதெல்லாம் அவை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகின்றன.

அந்த வகையில் டாவின்சி வரைந்த ‘கரடியின் தலை’ ஓவியம் சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. இந்த ஓவியமானது வெறும் 7 செ.மீ. சதுர அளவு கொண்ட இளஞ்சிவப்பு-பழுப்பு நிற காகிதத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான தாமஸ் காப்லன் என்பவரிடம் இந்த ஓவியம் இருந்து வந்தது. இதனை அவர் கடந்த 2008-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த கலைப்பொருள் விற்பனையாளர் தாமஸ் வான் ஹாஃப்டன் என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த ஓவியத்தை அவர் ஏலத்தில் விட்டுள்ளார்.

இந்த ஓவியம் சுமார் 11 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.2 கோடி ஆகும். இதற்கு முந்தைய சாதனையாக டாவின்சியின் ‘ஹார்ஸ் அண்ட் ரைடர்’ ஓவியம் ரூ. 1.1 கோடிக்கு கடந்த 2001-ம் ஆண்டு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web