2020-21ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் அட்டவணை வெளியீடு!

உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா நாட்டு கிரிக்கெட் வாரியம் இரண்டு வருடங்களுக்கான ஆடவர், மகளிர் அணிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட்2020ல் அந்நாட்டு ஆடவர் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 9ம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 12ம் தேதியும், மூன்றாவது
 

2020-21ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் அட்டவணை வெளியீடு!லகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா நாட்டு கிரிக்கெட் வாரியம் இரண்டு வருடங்களுக்கான ஆடவர், மகளிர் அணிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட்2020ல் அந்நாட்டு ஆடவர் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 9ம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 12ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 15 ம் தேதியும் ஜிம்பாப்வே டவுன்ஸ்வில்லேயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 21 முதல் 25ம் தேதி வரை டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. அடுத்ததாக இந்திய ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலியாவில் 4 ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

1. டிசம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை பிரிஸ்பென்னில் போட்டி நடைபெறும்.
2. டிசம்பர் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அடிலெய்ட்டில் பகல், இரவு ஆட்டமாகத் தொடரும்.
3. டிசம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை : மெல்போர்னில் நடைபெறும்.
4ஜனவரி 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை சிட்னியில் நடைபெறும்.
ஜனவரி 12 ம் தேதி பெர்த்தில் முதல் ஒருநாள் போட்டியும்
ஜனவரி 15ம் தேதி மெல்போர்னில் இரண்டாவது ஒரு நாள் போட்டியும்,
ஜனவரி 17ம் தேதி சிட்னியில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் 2021அக்டோபர் 4, 6, 9 தேதிகளில் நடைபெறும்.

மேலும் இந்தியாவிற்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web