இனிமே மூன்று குழந்தைகளை பெத்துக்கலாம்... சீன அரசின் திடீர் முடிவால் தம்பதிகள் மகிழ்ச்சி!

 
China

சீனாவில் திருமணமான தம்பதிகள், 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. அதன் படி 2000 முதல் 2010-ம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 0.53 சதவீதமாக குறைந்தது.

எனவே குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் சீன அரசு குழந்தை பிறப்பை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.

உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த கட்டுப்பாடு சுமார் 40 ஆண்டுகள் தொடர்ந்தது.

அந்த காலகட்டத்தில் கட்டாய கருக்கலைப்பு, குடும்ப கட்டுப்பாடு அறுசை சிகிச்சை ஆகியவை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் விளைவாக மக்கள் தொகை கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் 2016-ம் ஆண்டு ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தை என்ற திட்டத்தை சீன அரசு கொண்டு வந்தது.

இந்த நிலையில்  மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

From around the web