கும்பமேளாவில் கலந்து கொண்ட நேபாள நாட்டு முன்னாள் அரசர், அரசிக்கு கொரோனா பாதிப்பு

 
கும்பமேளாவில் கலந்து கொண்ட நேபாள நாட்டு முன்னாள் அரசர், அரசிக்கு கொரோனா பாதிப்பு

நேபாள நாட்டு முன்னாள் அரசர் மற்றும் அரசி கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

நேபாள நாட்டின் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா.  அந்நாட்டின் முன்னாள் அரசி கோமல் ஷா.  இவர்களுடைய மகள் பிரேரணா ஷா.  கடந்த சில நாட்களுக்கு முன் அரசர் மற்றும் அரசிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தனிமைப்படுத்தி கொண்ட அவர்கள் காத்மண்டுவில் உள்ள நார்விக் சர்வதேச மருத்துவமனையில் நேற்று மதியம் 1 மணியளவில் தங்களுடைய மகளுடன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

இதில் அவர்கள் 3 பேரின் உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.  இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், முன்னாள் அரசருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

From around the web