இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இங்கிலாந்து அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!!

 
Sajid-Javid

இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித். இவர் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 17) அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் எனக்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிக லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

From around the web