ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு கொரோனா..? தனிமைப்படுத்திக் கொண்டதாக அதிபர் மாளிகை அறிவிப்பு

 
Vladimir-Putin

ரஷ்யாவின் அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று ரஷ்யா. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இங்கிலாந்துக்கு  அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது.

ரஷ்யாவில் இதுவரை  71.76 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை 1.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அந்நாட்டில் தினசரி பாதிப்பு ஏறத்தாழ 17 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.  

கொரோனா தொற்றுக்கு எதிராக முதன் முதலாக தடுப்பூசி கண்டறிந்ததாக அறிவித்துக்கொண்ட ரஷ்யா, இன்னும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. புதினுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, புதின் சுய தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  புதின்  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

From around the web