நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து.. 820 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிளார்கள்... 11 பேர் பலி!

 
Siberian-coal-mine

ரஷியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

ரஷியாவின் செர்பியா மாகாணத்தில் லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்க நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில் நேற்று 280-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

820 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

Siberia-coal-mine

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 239 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆனால், இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து, சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

From around the web