இரண்டாக உடைந்த கார்..! கனடாவில் நடந்த கோர விபத்தில் பெண் பலி... சாலை முழுவதும் சிதறிய பாகங்கள்

 
Toronto

கனடாவில் இரவு நேரத்தில் கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் டொராண்டோவின் எட்டோபிகோக் என்ற இடத்தில் தான் இந்த விபத்தானது சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் நடந்துள்ளது.

அந்த சமயத்தில் வேகமாக வந்த கார் கம்பத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக காரானது இரண்டு பகுதிகளாக உடைந்தது.

Torontp-car-crash

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் ஆண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழ்ந்தார். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

கார் உடைந்ததில் சாலை முழுவதும் காரின் பாகங்கள் குப்பை போல சிதறின. இதையடுத்து போலீசார் விசாரணைக்காக அந்த பகுதியை மூடினர்.

விசாரணைக்கு பின்னர் இந்த விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web