ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு; 100 பேர் பலி..!

 
Afghan

மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில்  உள்ள குந்தூஸ் மகாணத்தில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்தாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும்,  ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.  

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

From around the web