இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

 
Abdulrazak-Gurnah

இலக்கியத்திற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதில் இருந்து எழுதி வரும் அப்துல் ரசாக் குர்னா, பல நாவல்களை எழுதி உள்ளார். தான்சானியா நாட்டை சேர்ந்த அப்துல் ரசாக் குர்னா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

From around the web